அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரப்புகள் , கடைகள் தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்டவை வைத்து வியாபாரம் செய்து வருவதால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி திருத்தொண்டர் பேரவை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் அதில் ஆக்கிரமிப்பு கடை அகற்றிடவும் கிரிவல பாதையில் தள்ளுவண்டிக் கடைகள் ஆக்கிரம்புகள் அகற்றுவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழு ஒன்றை அமைக்கப்பட்டது தொடர்ந்து சில நாட்களாக கிரிவல பாதையில் ஆக்கிரம்புகளை அகற்றப்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது கிரிவலம் பாதையில் எந்த விதமான அவசர வாகனங்களை தவிர எந்த வாகனமும் வரக்கூடாது என்ற உத்தரவு நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு ஆய்வுகளை இன்று ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.