திண்டுக்கல் அஞ்சலகங்களில் காப்பீடு வசதி

59பார்த்தது
திண்டுக்கல் அஞ்சலகங்களில் காப்பீடு வசதி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சத்துக்கு விபத்து காப்பீட்டு வசதியை ஆண்டுக்கு ரூ. 520, ரூ. 555, ரூ. 755 தவணைத் தொகை செலுத்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் கூறியதாவது: அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ. 520, ரூ. 555, ரூ. 755 தவணைத் தொகை செலுத்தி ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. 15 முதல் 65 வயதுக்குள்பட்டவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி, தொலைபேசி மூலம் மருத்துவ ஆலேசானை, விபத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகள், விபத்தினால் மரணம், நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்விச் செலவுகளுக்கு ரூ. 1 லட்சம், திருமண செலவுகளுக்கு ரூ. 1 லட்சம் வரை என பல்வேறு பலன்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி