பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரியில் இருந்த மீன் கழிவுகள்

61பார்த்தது
கேரளாவில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி சென்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பழனி அருகே சத்தி ரப்பட்டி பகுதியில் நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி அருகே கேரள பதிவு எண் கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்று பழுதாகி நின்றது. அந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு வந்து லாரி டிரைவரிடம் விசா ரணை நடத்தினர். அவரிடம் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
விசாரணையில், கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை தூத்துக்குடியில் உள்ள ஆலைக்கு ஒரு வித எண்ணெய் தயா ரிப்பதற்கு கொண்டு செல்வதாக டிரைவர் தெரிவித்தார். உடனே அந்தலாரியை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் மீன் கழிவுகள் இருப்பதும், அதனால் துர்நாற்றம் வீசியதும் தெரியவந்தது. இதற்கிடையே கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி வழியாகலாரியில் கொண்டு செல்வதாக தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி