இந்தியாவில் மீண்டும் உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழனி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பழனி நகராட்சி 25-வது வார்டு கவுன்சிலர் ஜென்னத்துல் பிர்தவுஸ் மற்றும் விசுவாச அறக்கட்டளை சார்பில் 60 கர்ப்பிணிகளுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அ. தி. மு. க. பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.