பழனி பஸ்நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

84பார்த்தது
பழனி பஸ்நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்ட மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்கு போலீஸ் சார்பில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனி பஸ்நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு கலால்துறை உதவி ஆணையர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். 

கோட்ட கலால் அலுவலர் வடிவேல்முருகன், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்பு மதுபானம், சாராயம், புகையிலை போன்ற போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் சமூக பிரச்சினை குறித்து கரகாட்டம், கோலாட்டம், பறையிசை, பொய்க்கால் ஆட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியை பஸ்நிலையத்துக்கு வந்த பொதுமக்கள், பயணிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து பயணிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸை அதிகாரிகள் வழங்கினர். இதேபோல் நெய்க்காரப்பட்டி, கணக்கன்பட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி