பழனி முருகன் கோயிலில் விடுமுறை நாளில் குவிந்த பக்தர்கள்

1பார்த்தது
பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவில், கிரிவலப் பாதை, ரோப்கார் நிலையம், வின்ச் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கிரிவலப் பாதையில் பக்தர்கள் காவடி எடுத்தும், தீர்த்தக் குடங்களை சுமந்த படியும் மேளதாளம் முழங்க ஆடியபடி கிரிவலம் வந்து முருகனை தரிசிக்க சென்றனர். தொடர்ந்து மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்து செல்ல கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி