முருகன் மலை கோவில் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். பக்தர்கள் வருகையில் முதலிடம் பெற்றுள்ளது. மலைக்கோவிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் நவபாஷாணங்களால் வடிவமைக்கப்பட்டவர். போகர் என்னும் சித்தர் வடிவமைத்தார். இப்படிப்பட்ட முருகப்பெருமானைக் காண, உலக அளவில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தற்பொழுது பழனி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால் பழனிக்கு வரும் பக்தர்கள் பாத விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அதன் பின்பு தான் படிப்பாதைகளிலோ, யானை பாதைகளிலோ, மின்னிலுவை ரயிலிலோ, ரோப் காரிலோ, செல்வார்கள். குறிப்பாக பழனி மலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பாத விநாயகர் கோவில் இருந்து, மின் இழுவை ரயில் நிலையத்திற்கு நடந்து தான் செல்கின்றனர். அல்லது மின்னிலுவை ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தால் அங்கிருந்து வாத விநாயகர் கோவிலுக்கு நடந்துதான் வருகின்றனர். எனவே வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்களின் கால்களில் சூடு தாங்காமல், கொப்பளங்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் அவதி அடைகின்றனர். பக்தர்களின் நலன் கருதி கோவில் நிர்வாகம் பாத விநாயகர் கோவிலில் இருந்து மின் நிலுவை ரயில் நிலையம் வரை, நிழல் பந்தலோ அல்லது தரை விரிப்போ அல்லது கூலிங் ஒயிட் பெயிண்ட் அடிக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களின் கோரிக்கை.