ஆறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். தற்போது கிறிஸ்துமஸ் புத்தாண்டு என தொடர் விடுமுறை காரணமாக பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டை முன்னிட்டு குவிந்துள்ளனர்.