பழனி கோட்ட வருவாய்த்துறை சார்பில், 'பசுமை பழனி' என்ற தலைப்பில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பழனியில் நடைபெற்றது. பழனி சப்-கலெக்டர் கிஷன் குமார் தலைமை தாங்கி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
நகர்நல அலுவலர் மனோஜ்குமார், சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார் உள்பட நகராட்சி அலுவலர்கள், வருவாய் துறை பணியாளர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் ஆர். எப். ரோடு, திண்டுக்கல் ரோடு, கோர்ட்டுரவுண்டானா வழியாக பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவர்கள், மாணவிகள் பிளாஸ்டிக் தடுப்பு, அதன் தீமைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும் கல்லூரி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது தொடர்பான கண்காட்சி நடைபெற்றது.