திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் பாரவேல் மண்டபத்தில் வருடாபிஷேகம் நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் உட்பிரகாரத்தில் வலம் வந்தன. அதன் பின் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் உச்சிக்கால பூஜையில் நடைபெற்றது. தொடர்ந்து யாக பூஜையை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வ சுப்பிரமணியம் குருக்கள் குழுவினர் நிகழ்த்தினர்.