திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் 55வது பிறந்தநாள் விழா பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் வடக்கு சார்பாக கொண்டாடப்பட்டது. புண்ணியம் முதியோர் இல்லத்தில் அறுசுவை அன்னதானம் வழங்கும் ஆயக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தங்கரதம் இழுத்தும் கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட தலைவர் அ வைரமுத்து தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக ஜோதி முத்து திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பங்கேற்றார். வரவேற்புரை பிரபாகரன் பழனி நகர செயலாளர் வழங்கினார். பாட்டாளி மக்கள் கட்சியினர் பங்கேற்று சிறப்பித்தனர்.