திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் எம்ஜிஆரின் 37ஆவது நினைவு தினத்தை அதிமுகவினர் அனுசரித்தனர். பெரியப்பா நகரில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர மன்ற உறுப்பினர் நடராஜன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகி காளியப்பன் இருவரும் எம்ஜிஆர் சிலை முன்பு நிற்க போட்டி போட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.