பழனியில் நடைபெற்ற மூன்று நாள் விவசாய கண்காட்சி

76பார்த்தது
பழனியில் நடைபெற்ற மூன்று நாள் விவசாய கண்காட்சி
பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் குட் லைன்ஸ் அரிமா சங்கத்தின் சார்பாக மூன்று நாள் விவசாய கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இதில், நவீன விவசாய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள், மாடி தோட்ட விதைகள், தானியங்கள், பால்பண்ணை மற்றும் கோழி பண்ணை உபகரணங்கள், மருந்தில்லா விவசாய உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 

விவசாயிகள் தங்கள் பண்பாட்டு முறைகளை மேம்படுத்த நவீன இயந்திரங்களின் பயன்பாடு குறித்து ஆலோசனைகளும், அரசின் மானிய திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அளிக்கப்பட்டன. இந்த கண்காட்சியில் பழனி, ஆயக்குடி, கணக்கன்பட்டி, புளியம்பட்டி, நெய்க்காரப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். 

கண்காட்சி ஏற்பாடுகளை குட் லைன்ஸ் கிளப் பட்டயத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள் சுப்புராஜ், அசோக் குமார், மனோகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கான இந்நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி