திண்டுக்கல் மாவட்டம்
பழனி பேருந்து நிலையத்தில் தீயணைப்புத்துறை சார்பாக, விபத்து இல்லா தீபாவளியை பொதுமக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டும் என வலியுறுத்தி, தீபாவளி குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கையை பொதுமக்களிடையே வழங்கினர். தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கும் பொழுது பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை கையாள வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் பொருந்திய துண்டறிக்கையை வழங்கி வருகின்றனர்.