திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதியாக சாய்தளம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று டிஎஸ்பி தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் காவல் நிலையத்தில் சாய்தளம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் காவல் நிலையத்திற்கு வந்து புகார் மனு அளிக்க வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டதற்கு மாற்றுத்திறனாளிகள் பலரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.