பழநியில் குட்கா விற்ற 3 பேர் கைது

52பார்த்தது
பழநி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவு நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பழநி காந்தி மார்க்கெட் பகு தியில் இத்தனிப்படை யினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப் போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த சண்முகபுரத்தை சேர்ந்த ஆதஷா (45), கோட் டைமேட்டு தெருவை சேர்ந்த முகமது ரபீக் (40) மற்றும் விகே மில்ஸ் பகு தியில் குட்கா விற்பனை செய்து கொண்டிருந்த பீர் முகமது (40) ஆகி யோரை கைது செய்த னர். மேலும் இவர்களிட மிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்கள் 50 கிலோ அளவிற்கு பறிமு தல் செய்யப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி