திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் தமிழக வெள்ளாளர் பேரவையின் சார்பாக கல்வித்
திருவிழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக
வெள்ளாளர் பேரவையின் மாநில கெளரவ தலைவர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில்
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம்
இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை
கௌரவித்து தங்கம் மற்றும் வெள்ளி
நாணயங்கள், கேடயங்களை வழங்கினர். இதில் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.