லாரியில் கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது

55பார்த்தது
லாரியில் கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது
திண்டுக்கல் அருகே லாரியில் கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்ட எஸ். பி. பிரதீப் உத்தரவின்படி, ஒட்டன்சத்திரம் உட்கோட்டம் டி. எஸ். பி முருகேசன் ஆலோசனையின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா தலைமையிலான காவலர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் இருந்தனர்.

வேளாங்கண்ணி, கார்த்திக் ராஜன், மோரிஸ் ஜோசப்ராஜ், காங்குமணி ஆகியோர் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது பாளையங்கோட்டையை சேர்ந்த கோவிந்தன் மகன் விஜய் ஓட்டி வந்த லாரியை சோதனை செய்தனர். இதில் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை ஆதிலட்சுமிபுரம் பிரிவு அருகே வைத்து சுமார் 3 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். பின்பு செம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி