திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியை சேர்ந்த கணேஷ்பாபு இவர் மாற்றுத் திறனாளி சமூக ஆர்வலர் ஆவார் திண்டுக்கல் தேனி மதுரை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சமூகப் பிரச்சினைகள் பொதுமக்கள் கோரிக்கைகள் சாலை வசதி குடிநீர் வசதி பேருந்து வசதி உள்ளிட்ட 1060 மனுக்கள் கொடுத்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் 7 மனுக்களை வழங்கினார் அந்த மனுக்களில் ஏற்கனவே கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காமல் என்னை போராட்டம் செய்ய தூண்டி அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கி வரும் 18 துறைகளின் அரசு அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் கிடப்பில் கிடக்கும் அனைத்து மனுக்கள் மீதும் உடனே முறையாக விசாரணை செய்து நடவடிக்கையுடன் உண்மையான பதில் கடிதம் அனுப்பிட வேண்டும்.
கொடைக்கானலில் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் அதன் மூலம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தங்குதடையின்றி கிடைக்கும் போதைகளான் கஞ்சா மற்றும் சட்டவிரோதமது விற்பனையை தடுத்து பள்ளி மாணவர்கள் பொதுமக்களை காப்பற்ற வேண்டும். உள்ளிட்ட 7 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து உரிய பதில் கடிதம் அனுப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.