திமுக கூட்டணி தொடர்ந்து முத்திரை பதிக்கும்

75பார்த்தது
திமுக கூட்டணி தொடர்ந்து முத்திரை பதிக்கும்
திண்டுக்கல்லில் திமுக கூட்டணி தொடர்ந்து முத்திரை பதிக்கும் என அமைச்சர் ஐ பெரியசாமி பேசினார். திண்டுக்கல் மேட்டுப்பட்டி சிவபெருமாள் தெருவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா, அய்யன் திருவள்ளுவர் பாவேந்தர் சிற்றரங்கம் திறப்பு விழா, அன்னதானம் வழங்கு விழா ஆகியவற்றை துவக்கி வைத்து அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியதாவது:

முதல்வர் நல்ல திட்டங்களை மக்களுக்கு அளிப்பதால். தமிழ்நாடு முழுவதும் திமுக வெற்றி கொடி நாட்டியுள்ளது. திண்டுக்கல்லில் திமுக முத்திரை தொடர்ந்து பதிக்கும். முதல்வரின் காலை உணவு திட்டம் மிகவும் சிறப்பு பெற்றது. அதுபோல் இங்கு அன்னதானம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஐம்பதாண்டு காலம் இந்த இயக்கத்தை பல பிரச்சனைக்கு இடையில் காப்பாற்றியவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி.

அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் முதல்வர் ஸ்டாலினை நிச்சயம் பாராட்டிருப்பார். மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருப்பார். பசிப்பிணி தீர்க்கும் மருத்துவராக முதல்வர் திகழ்கிறார். அந்தப் பணியை திண்டுக்கல் மாவட்டம் தொடர்ந்து பின்பற்றி செயல்படும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் வேடசந்தூர் எம்எல்ஏ காந்தி ராஜன், எம் பி சச்சிதானந்தம், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, முன்னாள் கவுன்சிலர் வசந்தி கணேசன், மாவட்ட பிரதிநிதி கணேசன். ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you