வாக்குகளைப் பதிவு செய்த ஆசிரியா்கள்

51பார்த்தது
வாக்குகளைப் பதிவு செய்த ஆசிரியா்கள்
ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள வெளி மாவட்டங்களைச் சோ்ந்த ஆசிரியா்கள் சனிக்கிழமை தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

வருகிற 19 -ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியாற்ற உள்ள வெளி மாவட்டங்களைச் சோ்ந்த தோ்தல் அதிகாரிகள், ஆசிரியா்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய ஒட்டன்சத்திரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது.

இங்கு திண்டுக்கல், கரூா் மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களைச் சோ்ந்த தோ்தல் அதிகாரிகள், ஆசிரியா்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

இதேபோல, ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியாற்றும் 1, 384 ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்புகள், தோ்தல் பணி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியா் சசி, துணை வட்டாட்சியா் ஜெகதீஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி