ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவர் சாதனை

1263பார்த்தது
ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவர் சாதனை
ஒட்டன்சத்திரம், --நீளம் தாண்டுதல் போட்டியில் வென்ற ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவர் மாநில அளவில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஒட்டன்சத்திரம் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையே பல்வேறு பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடந்தன.

ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனர். 17 வயது பிரிவு நீளம் தாண்டுதல் போட்டியில் இப்பள்ளி மாணவர் ஆர். ராதாகிருஷ்ணகுமார் முதலிடம் பெற்று வருவாய் மாவட்ட அளவில் விளையாடத் தகுதி பெற்றார். இம்மாணவர் அக். 5ல் நடந்த வருவாய் மாவட்ட அளவிலான நீளம் தாண்டுதலில் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றார். சாதனை மாணவர், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களை தாளாளர் கே. திருப்பதி, செயலர்கள் சுரேஷ், மீனா, கண்ணன், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி