சித்தையன்கோட்டை: பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம்

81பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சி சாதாரண மாதாந்திர கூட்டம் பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் தலைவர் போதும் பொண்ணு முரளி தலைமையில் 20/12/24 வெள்ளிக்கிழமை இன்று காலை 11: 30 மணி அளவில் நடைபெற்றது.
சித்தையன் கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு முன்னிலை வகித்தார்


கூட்டத்தில் ஆத்தூர் அணை தலைமை நீரேற்று நிலையம் முன்பகுதியில் சுற்று சுவர் அமைத்தல்

சித்தையன் கோட்டை பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-2025-ன் கீழ் பேரூராட்சி பகுதியில் உள்ள நாயக்கர் வீடு அருகில் புதிதாக நிழற்குடை அமைக்கும் பணிக்கான டெண்டர் வழங்கிய டெண்டர்தாரருக்கு வேலை ஆணை வழங்கப்பட்டு இருப்பது தொடர்பாகவும் பல்வேறு தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

நடைபெற்ற கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் ஜாகிர் உசேன் உட்பட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி