ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் காத்திருப்பு போராட்டம்

71பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி ஊதியம் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி வெளியிட்ட அரசாணை 2d எண் 62 தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை நாள் 11 10 2017 இன் படி தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து அவ் ஊதியத்தினை அரசாணை அரசுகளில் வெளியிட்ட நாள் முதல் வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டங்கள் இயற்றியும் அரசாணைகள் பிறப்பித்தும் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வந்தும் குறைந்தபட்ச ஊதியம் சம வேலைக்கு சம ஊதியம் வந்த பாடு இல்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி