ஒட்டன்சத்திரம்: கூலித் தொழிலாளிகளுக்கு சங்கம் இல்லை

69பார்த்தது
ஒட்டன்சத்திரம்: கூலித் தொழிலாளிகளுக்கு சங்கம் இல்லை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் தொழிலாளர்களின் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு பேசியதாவது, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாட்டின் 2வது பெரிய காய்கறி மார்க்கெட் காந்தி காய்கறி மார்க்கெட்தான் அங்கு முதலாளிகளுக்கு சங்கம் உள்ளது. ஆனால் உடலை வருத்தி வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு ஏன் சங்கம் இல்லை? எனக் கேள்வி எழுப்பினார்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இப்பகுதியில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. அந்த கோவில்களுக்குள் சமூக நீதியின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்களா? 3% உள் ஒதுக்கீடு பெற்றதினால் மட்டுமே அருந்ததிய சமூக மக்கள் தற்போது சில இடங்களில் படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளில் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் இந்த 18% இட ஒதுக்கீடு இருக்கும்போது இச்சமூக மக்கள் பயன்பெற்றனரா? என்றால் இல்லை. 

நாங்கள் பிராமணிய கொள்கைகளை மட்டுமே எதிர்க்கிறோம்! அண்ணல் அம்பேத்கார், பெரியார், கார்ல் மார்க்ஸ், உள்ளிட்ட கொள்கை தலைவர்களின் வழியில் தொடர்ந்து செல்வோம் என நாகை திருவள்ளுவன் எழுச்சி உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி