உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், சின்னக்காம்பட்டி, எல்லைப்பட்டி மற்றும் மார்க்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ. 2. 80 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ. 1. 30 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் அய்யம்மாள், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) நாகராஜன், உதவிப்பொறியாளர் விஜயராகவன், வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதீஸ்வரன், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டம் உதவிப்பொறியாளர் பொன்னுவேல், இளநிலைப்பொறியாளர் கருப்பண்ணன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.