குஜிலியம்பாறை தாலுக்கா ஆலம்பாடி சிசி குவாரியைச் சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் வயது 32 ஜிஎஸ் இம்ப்ரோடெக் கான்ட்ராக்ட் கம்பெனியில் பொலிரோ பிக்அப் வண்டி மூலம் டீசல் போடும் வேலை செய்து வந்தார். பணியை முடித்துவிட்டு திரும்பிய அவரை லாரி உரிமையாளர்கள் சந்தோஷ் கோபிநாத் மேலாளர் மனோஜ் ஊழியர்கள் முருகேசன் லட்சுமணன் ஆகியோர் காரில் அழைத்துச் சென்று நீ டீசல் திருடி உள்ளாய் எனக் கூறி ரமேஷை தாக்கினர். இதில் காயமடைந்த ரமேஷ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாக்குதல் நடத்திய ஐந்து பேர் மீது குஜிலியம்பாறை சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.