கொடைக்கானல்: அனுமதியின்றி பொக்லைன் இயக்கக்கூடாது என தகவல்

56பார்த்தது
கொடைக்கானல்: அனுமதியின்றி பொக்லைன் இயக்கக்கூடாது என தகவல்
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லைன் இயந்திரம், கம்ப்ரசர், ஆழ்துளைக் கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளக் கூடாது என 15 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த வள்ளலார் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த உத்தரவை மீறி கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பொக்லைன், கம்ப்ரசர் இயந்திரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பாறைகள் வெடிவைத்து உடைக்கப்படுகின்றன. 

இதனால், சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியராக அண்மையில் பொறுப்பேற்ற திருநாவுக்கரசு தலைமையில் கொடைக்கானல் பகுதி பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் திருநாவுக்கரசு பேசியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பொக்லைன், போர்வெல், கம்ப்ரசர் ஆகிய இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும். அனுமதியின்றி பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.

தொடர்புடைய செய்தி