திண்டுக்கல்:
பிரதமர், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் முறையான சிகிச்சையை கட்டணம் செலுத்தாமல் பயனடையலாம் என திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் , முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 1513 மருத்துவம், அறுவை சிகிச்சைகள் 52 நோய் கண்டறியும் பரிசோதனைகள், 21 தொடர் சிகிச்சை முறைகள், 15 உயர் அறுவை சிகிச்சைகள், இன்னுயிர் காக்கும் திட்டம் என 1689 சிகிச்சை முறைகளுக்கு அரசாலும் காப்பீட்டு நிறுவனங்களாலும் முறையாக அங்கீகரிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைகள் வசதியுடன் ஆண்டுதோறும் 8000 பேர் வரை பயன் பெறுகின்றனர்.
விதவைகள், ஆதரவற்றவர்கள் மாற்றுத் திறனாளிகள், ஓய்வூதியம் பெறுபவர்கள், அகதிகள் இவர்களுக்கு வருமான வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.