தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள ஜெ. ஜெ. நகரில் வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள ஜெ. ஜெ. நகர் பகுதிகளில் வசித்து வரும் ஆதிவாசி மலைவாழ் மக்களுக்கு இலவச பட்டா வழங்கிட வேண்டி மனு அளித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் செவ்வாய் கிழமை மதியம் 2 மணியளவில் பயனாளிகளிடம் விசாரணை செய்து மேற்கண்ட வீடுகளை, இடங்களை நேரில் கள ஆய்வு செய்து, பார்வையிட்டு, பின்பு பயனாளிகளிடம் உங்களுக்கு விரைவில் பட்டா கிடைக்க தமிழக அரசிடம் வலியுறுத்தி, நாங்கள் உங்களுக்கு விரைவாக பட்டா வாங்கி தருகிறேம் என்று கொடைக்கானல் வட்டாட்சியர் கார்த்திகேயன் உறுதியளித்தார். உடன் துணை வட்டாட்சியர் ஜெயராஜ், தாண்டிக்குடி கிராம வருவாய் ஆய்வாளர் சுவாமிநாதன், தாண்டிக்குடி கிராம நிர்வாக அலுவலர் சரவணகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.