இலவச கண் சிகிச்சை முகாம்

72பார்த்தது
இலவச கண் சிகிச்சை முகாம்
திண்டுக்கல் பாஜக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் சூர்யகுமார் தலைமையில் நடந்தது.

இளைஞர் அணி மாவட்ட செயலாளர் காண்ட்ராக்டர் பாலாஜி , நகர் தெற்கு பொருளாளர் மெடிக்கல் பாலாஜி, நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் சிவகுமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

இன்று காலை 8: 00 மணி முதல் இலவச கண் பரிசோதனை முகாமைமாவட்ட தலைவர் தனபால் துவக்கி வைத்தார். திண்டுக்கல் நகர் தெற்கு நகர தலைவர் வழக்கறிஞர் முருகேசன் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இலவச கண் பரிசோதனை முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைத்து பாஜக நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்டத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி