திண்டுக்கல்லில் நேற்று 3 குழந்தைகள் உட்பட நால்வருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகள், தெரு, ரோட்டோரங்களில் தேங்கும் தண்ணீரில் 'ஏடிஸ்'கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்புகிறது.
இதனால் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் கொசுக்களிடம் கடிபட்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நிலை அதிகரித்து வருகிறது. தொடரும் இப்பிரச்னையால் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒருசிலர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில் இருந்தாலும் மாவட்டத்தில் பாதிப்புகள் குறைந்தபாடில்லை. நேற்றும் 3 குழந்தைகள் உட்பட நால்வருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.