திண்டுக்கல், முத்தழகுபட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் உயர்கோபுர மின் விளக்கு அமைப்பதற்கான பணியை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மாமன்ற உறுப்பினர்கள் ஸ்டெல்லாமேரி, கணேசன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.