திண்டுக்கல், முத்தழகுபட்டியை சேர்ந்த அந்தோணி அசோக்ராஜ் (45) மற்றும் செபஸ்தியார் (42) நண்பர்கள் ஆவார்கள். இந்நிலையில் இவர்கள் டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்க ஏற்பட்ட போட்டியில் செபஸ்தியார் பாட்டிலால் அந்தோணி அசோக்ராஜை தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலையாய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு செபஸ்தியாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.