இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்த அட்டகாசம்

72பார்த்தது
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள அவரது திருவருவ சிலைக்கு ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறி கூட்டமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீலிங் செய்ததோடு திடீரென வாகனங்களை சாலையில் நிறுத்தி அவ்வழியாக வந்த அரசு பேருந்து மீது ஏறி அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போலீசார் கண்டித்தும் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பின்னர் தப்பாட்டக் கலைஞரை போலீசார் வாகனத்தில் ஏற்றியதாக திடீரென சாலையில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் தப்பாட்டக் கலைஞரை வாகனத்தில் இருந்து இறக்கி விட்டதும் கலைந்து சென்றனர். விதிகளை மீறி காவல் தறையினர் முன்னரே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர்கள் மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி