திண்டுக்கல்லில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் கூட்டம் நடந்தது. திருவருட்பேரவை மற்றும் அடுத்த ஆண்டிற்கான காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் தேர்வு குறித்து முன் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொது தேர்வில் தமிழக அளவில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்ற நந்தினி மாணவிக்கும்,
திமுக புதிய ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் வெள்ளிமலை என்பவருக்கும் பாராட்டு விழா தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்டது. விழாவில் சமூக ஆர்வலர் நாட்டான்மை காஜா, திண்டுக்கல் கிழக்கு அம்மா பேரவை செயலாளர் யூசுப் அன்சாரி, காஸ்மாஸ் லயன்ஸ் புரவலர் திப்பூசியேஸ், டாக்டர் அமலாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.