நிலக்கோட்டை - Nilakottai

பிள்ளையார்நத்தம் ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டம், பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி முன்னிலையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01. 11. 2024 அன்று நடைபெற இருந்த உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் இன்று (23. 11. 2024) நடைபெற்றது. இக்கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதர இயக்கம் குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) நாகராஜன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பாஸ்கரன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அன்புகரசு, ஆத்துர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஹேமலதா மணிகண்டன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, ஆத்தூர் வட்டாட்சியர் முத்துமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా