கொடைக்கானலில் நெய்மிளகாய் சீசன் தொடக்கம்
இலங்கைக்கு பல்வேறு தொழில்களுக்காக சென்ற தமிழர்கள் தாயகம் திரும்பிய போது நெய்மிளகாய் கொண்டு வந்தனர். இந்த மிளகாய்களை கொடைக்கானல் மலைக்கிராமங்கள், ஏற்காடு, ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில சாகுபடி செய்தனர். பம்பரம் போன்று தோற்றமளிக்கும் நெய்மிளகாய் நாட்டு மிளகாயை விட காரத்தன்மை அதிகம் கொண்டதாகும். குழம்பில் போடும்போது நெய்போன்று வாசனை கமகமக்கும். கொடைக்கானலில் தொடர்ந்து சாகுபடி செய்யப்பட்ட போதும் மழைக்காலமே இதன் சீசனாகும். தற்போது தொடர்மழை காரணமாக நெய்மிளகாய் வரத்து அதிகளவில் உள்ளது. 180 கிராம் கொண்ட 1 பாக்கெட் ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மலைப்பகுதியில் ஒருசில விவசாயிகள் மட்டுமே நெய்மிளகாய் சாகுபடி செய்கின்றனர். இதன் காரணமாகவே விலை அதிகமாக உள்ளது.