வத்தலகுண்டு: மதுப்பாட்டில்கள் சாலையில் போட்டு உடைப்பு

80பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, கோம்பைபட்டி உள்ளது. விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதி, குளிப்பட்டி செல்லும் சாலையில், தனியார் ஒருவர் காவல்துறையின் துணையுடன், அரசு அனுமதி இல்லாமல், 24 மணி நேரமும், கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை நடத்தி வந்துள்ளார்.

இதனால், இந்தப் பகுதியில் உள்ள கோம்பைபட்டி, குளிப்பட்டி, சிவஞானபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள், இங்கு மது வாங்கி குடித்து வந்துள்ளனர். மேலும், இந்த வழியில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் பெரும் அச்சத்துடன் சென்று வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட வத்தலகுண்டு காவல் நிலையத்தில் கிராம பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்று, சாக்கு பையில் வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ஆவேசமாக சாலையில் போட்டு உடைத்தனர். மேலும், அந்த சாலையில் மரங்களைப் போட்டு மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி