வத்தலகுண்டு: வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவன் கைது

56பார்த்தது
வத்தலகுண்டு: வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவன் கைது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகர் மற்றும் விராலிப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டது தொடர்பாக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதுகுறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தலைமையில் சார்பு ஆய்வாளர் ஷேக்அப்துல்லா மற்றும் காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக வத்தலகுண்டுவை சேர்ந்த ஷாருக்கான், ஸ்ரீசபரி உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த மதன்குமார் மற்றும் 1 சிறுவன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி