வத்தலகுண்டு: கலியுக வரத ஐயப்பன் ஆலயத்தில் பூக்குழி விழா

66பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜையை யொட்டி 64 ஆம் ஆண்டு பூக்குழி விழா நடைபெற்றது

பூக்குழி விழாவையொட்டி ஸ்ரீ கலியுக வரத அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் ஐயப்ப பக்தர்களின் பஜனை பாடல் நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது

நிகழ்வின் தொடர்ச்சியாக முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட அக்னி குண்டத்தில் சிறப்பு பூஜைக்கு பிறகு முதலில் குருசாமிகள் அக்னி குண்டத்தில் இறங்கினர்
இதனை அடுத்து வத்தலகுண்டு ஐயப்ப பக்தர்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொருவராக அக்கினி குண்டத்தில் இறங்கி சரண கோஷத்துடன் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்

இதனைத் தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்வை காண வந்த ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் அக்னி குண்டத்தில் உப்பு காணிக்கை அளித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்
பூக்குழி நிகழ்வை யொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி