திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்த மித்யா (41). இவர், காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று(செப்.10) பணிக்காக, தனது இரு சக்கர வாகனத்தில், செம்பட்டியில் இருந்து காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு சென்று கொண்டிருந்த போது செம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த வேன், இரு சக்கர வாகனத்தில் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.