திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியில் உள்ள பாரதி அண்ணாநகர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக வனிதா, உதவி தலைமை ஆசிரியர் சேதுமுருகன். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 20-ம் தேதி மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி புகாரில் உண்மை இருப்பதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை கொடைக்கானலுக்கு ஆய்வுக்காக வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த பிரச்சனை குறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டறிந்து தலைமை ஆசிரியை வனிதாவையும் உதவி தலைமை ஆசிரியர் சேது முருகனையும் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை வனிதா அடுக்கம் ஊராட்சி சாமக்காட்டு பள்ளம் பகுதியில் உள்ள பள்ளிக்கும், உதவி தலைமை ஆசிரியர் சேது முருகன் பூண்டி பகுதியில் உள்ள பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.