கொடைக்கானலில் யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

85பார்த்தது
கொடைக்கானலில் யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
கொடைக்கானல் மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கொடைக்கானல் பண்ணைக்காடு வாழைகிரி ரோட்டில் காட்டு யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை தடியன்குடிசைப் பகுதியில் சில தினங்களாக காட்டுயானை முகாமிட்டிருந்தன. பண்ணைக்காடு எதிரொலிபாறை வழியாக வாழைகிரி சென்றது. அவ்வழியே ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. தொடர்ந்து பூலத்துார் பகுதி விளை பொருட்களை சேதப்படுத்தியது. பெரும்பள்ளம் வனத்துறையினர் ஒற்றை யானை நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி