பசுமாடுகள், கன்றுக்குட்டிகளை திருடி கடையில் விற்பனை

72பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சமீபகாலமாக கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டு வளர்ப்பு விலங்குகளான மாடுகள் அடிக்கடி காணமல் போன நிலையில் பாதிக்கப்பட்ட விவசாய மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர். தொடர் புகாரின் காரணத்தினால் காவல்துறையினர் கொடைக்கானலில் உள்ள மாடு அறுக்கும் மையங்களில் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த காவல்துறையினர் பசு மாடுகளை பறிகொடுத்த உரிமையாளர்களிடம் காட்டியுள்ளனர் பறி கொடுத்தவர்கள் எங்களுடைய மாடுகள் தான் என்று உறுதி செய்த பின்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

கொடைக்கானல் இரவு நேரங்களில் சரக்கு வாகனத்தில் மாடுகளை ஏற்றி சென்றதும் மாடுகளின் கயிறு கட்டி இழுத்து செல்லும் சிசிடிவி பதிவுகளை வைத்து இருவரை தேடி வந்த நிலையில் திருடர்களை பற்றிய தகவல் கிடைத்தது.

காவல்துறையினர் விரைந்து சென்று அண்ணா சாலையில் SSS பீஃப் கடை உரிமையாளர்
முகமது அசாருதீன் 36 கூட்டாளி மருதுபாண்டி 35ஆகிய
இருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்

விசாரணையில் இவர்கள் சமீபகாலமாக கொடைக்கானலில் பகல் மற்றும் இரவு நேரத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை திருடி மாட்டு இறைச்சி கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி