திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புன்னியகோட்டி வழிகாட்டுதலின்படி சின்னாளபட்டி சேரன்வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் (எஸ். ஜி. எப். ஐ) நடத்தும் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுகளில் பங்கேற்கும் தமிழக அணிக்கான கைப்பந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு நடைபெற்றது.
முன்னதாக போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பந்தை பாஸ் செய்யும் விதம், விளையாடும் விதம், சக போட்டியாளர்களிடம் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை கண்கானித்து சிறந்த வீரர்களை தேர்வு செய்தனர். தமிழக அணிக்காக தேர்வு செய்யப்படும் வீரர்கள் 16 பேரும் நவம்பர் 3வது வாரம் பஞ்சாப்பில் நடைபெறும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகளில் தமிழக அணி சார்பாக பங்கேற்க உள்ளனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அறங்காவலரும், தாளருமான சிவகுமார், பள்ளி அறங்காவலர் மற்றும் முதல்வருமான திலகம், பள்ளி மேலாளர் பாரதிராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். 8 மண்டலங்களில் இருந்து 72 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.