நிலக்கோட்டை, சீத்தாபுரம், விராலிப்பட்டி, என். ஊத்துப்பட்டி, மிளகாய் பட்டி, என். ஆண்டிபட்டி, கோடாங்கி நாயக்கன் பட்டி, கோட்டூர், பிள்ளையார் நத்தம், குளத்துப்பட்டி, வீலி நாயக்கன்பட்டி, கரட்டூர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் மானாவாரி பயிர்களான கம்பு, சோளம், உளுந்து, துவரை, இரும்புச் சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கடந்த மாதம் பெய்த மழைக்கு விவசாயிகள் உழவு பணி செய்து சாகுபடி செய்தனர்.
தற்போது பச்சை பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியாக வளர்ந்த நிலையில் உள்ளது.
ஆனால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் சரிவர மலை பெய்யாததால் மானாவரி பயிர்களாக சாகுபடி செய்த பயிர்கள் விளைவதற்கு போதிய தண்ணீர் இல்லை. மானாவாரி பயிர்கள் வளர வேண்டும் என்றால் வருணபகவான் கருணை காட்ட வேண்டும்.
எனவே மானாவாரி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.