மலைச்சாலையில் பயணிகள் பேருந்தை தள்ளும் நிலை

69பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், சுற்றுலாத்தலமான  கொடைக்கானலுக்கு மதுரை, திண்டுக்கல், வத்தலகுண்டு. பழனி தேனி. திருச்சி. காரைக்குடி. சென்னை. கோவை உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து  பகுதிகளில்  இருந்து அரசு பேருந்துகள் தினம்தோறும் இயக்கப்படுகின்றனர்

மதுரை கிளையில் இருந்து ஐந்து அரசு பேருந்துகள் கொடைக்கானலுக்கு   இயக்கப்படுகின்றன  இதில் இரண்டு  பேருந்துகள் கடந்த இரண்டு மாதங்களாக இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது இதனால் கொடைக்கானல் சுற்றுலா வந்து செல்லும் பயணிகள் பேருந்து கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.  மீதம் உள்ள மூன்று பேருந்துகள் சரியான பராமரிப்பு இன்றி இயக்கப்படுவதால் தினந்தோறும் கொடைக்கானல் மலைச்சாலையில் பழுதாகி  நின்று விடுகின்றன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை  மதுரையில் இருந்து கொடைக்கானல் சென்ற இரண்டு அரசு பேருந்துகள் நடுவழியில் நின்றது இதனால் பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் நடுவழியில் நின்று பேருந்து கிடைக்காமல்  தவித்தனர்.  மேலும் நடுவழியில் நின்ற பேருந்தை  பயணிகள் தள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது இதனால் கொடைக்கானல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி