திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கொங்கபட்டியைச் சேர்ந்த சுஜிதா தனது இரண்டு குழந்தைகளுடன் பெட்ரோல் ஊற்றி திக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு இருந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் பெட்ரோலை பிடுங்கி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்குவதற்காக அழைத்துச் சென்றனர்.
சுஜிதா செய்தியாளர்களிடம் கூறும் பொழுது தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. தனது கணவர் செல்லமுத்து சென்னை காய்கறி சந்தையில் பூ வியாபாரம் செய்வதாகவும், கடந்த ஒரு வருடங்களாக வேறு ஒரு பெண்ணை சேர்த்து வைத்துக் கொண்டு நிலக்கோட்டை பகுதிக்கு வருவதில்லை என்றும்,
தனது நகைகள் அனைத்தையும் பிடுங்கி விட்டு சென்றதாகவும் கணவருடன் சேர்த்து வைக்க கோரி நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதற்காக வந்ததாக கூறினார்.
மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறினார்.