திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள ஏரி சாலை நகராட்சிக்கு அருகே ஜோஸ்வா என்பவர் பைக்கை நிறுத்திவிட்டு வேறு ஒரு வேலைக்காக சென்று இருக்கிறார்.
சில மணி நேரம் கழித்து அவர் வந்து பார்க்கையில் அவருடைய இருசக்கர வாகனம் தொலைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் சிவப்பு நிறம் சட்டை அணிந்த ஒரு நபர் மது போதையில் பைக்கை தள்ளியே சென்ற சிவப்பு சட்டைக்காரர் நகராட்சியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள சாலையிலேயே பைக்கை தள்ள முடியாமல் அங்கேயே நிறுத்தி பைக்கின் அருகே அமர்ந்திருக்கிறார் வேலையை முடித்து மீண்டும் வந்து பார்த்த ஜோஸ்வா தன்னுடைய பைக் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டு இருப்பதை கண்டும் அதன் அருகே சிவப்பு சட்டை மனிதர் அமர்ந்திருப்பதை கண்டும் போலீசாரிடம் தகவல் தெரிவித்து போலீசாரை அங்கு அழைத்துச் சென்று பார்த்தபோது சிவப்பு சட்டையா அணிந்திருந்த மது போதைக்காரர் கனவில் ஏதோ இது தன்னுடைய பைக் என்றும் இந்த பைக்குக்கு சாவியை இல்லாமல் நானே எடுத்துச் சென்று வந்ததாகவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது பைக்கை திருடி 100 மீட்டர் தொலைவிலேயே அதனை நிறுத்தி பைக்கின் அருகே அமர்ந்திருந்த சிவப்பு சட்டைக்காரரை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனுடைய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.